திரு. நெல்லை K வசந்தன் ஐயா அவர்கள் கண்டுபிடித்த முறையே NKV SYSTEM எனப்படுகிறது. பெருகிவரும் மனித சமுதாயத்தில் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்கள், மருத்துவ முறைகள், வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் போன்ற விஷயங்களை ஜோதிடத்திற்குள் அடக்கி மக்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ள கரு சிதையாமல் மாற்றி அமைத்தார்.
மனிதர்களுக்கு நடக்கும் சம்பவங்கள் மட்டுமே கிரகங்களால் நிச்சயிக்கப்படுகிறது என்று பலர் நம்பி வந்த நிலையில், சம்பவங்கள் மட்டுமல்ல மனிதர்களுக்கு சூட்டப்படும் பெயர்கள் கூட கிரகங்களால் தான் நிச்சயிக்கப்படுகிறது. அப்படி உருவான பெயர்களை எந்த கிரகம் அவருக்கு வழங்கியதோ அந்த கிரகம் அவர் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கிறது என்ற மாபெரும் உண்மையை உலகிற்கு உரக்கச் சொன்னவர்.
மனிதர்களுக்கு சூட்டப்படும் பெயர்கள் மட்டுமல்ல இறைவனுக்கு சூட்டப்படும் பெயர்கள் கூட கிரகங்களால் தான் நிச்சயிக்கப்படுகிறது என்பதையும் நிரூபித்தவர். மனிதனுக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்க்க கூடிய கிரகங்கள் அவர்கள் ஜாதகத்தில் எங்கு இருக்கிறதோ அந்த கிரகங்கள் இறைவனின் பெயராக இருக்கும் சூட்சமும் முழுமையாக NKV முறையில் திரு. நெல்லை K வசந்தன் ஐயா அவர்களால் கற்பிக்கப்பட்டது. உலக மக்கள் அனைவருக்கும் ஒரே கோவில் பலன் அளிக்காது என்பதை முதன் முதலில் சுட்டி காட்டிய முறை தான் NKV SYSTEM.
இது மட்டுமல்ல மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய பல சிக்கல்களை தீர்க்கும் ஒரு கருவியாக மற்றும் பல சூட்சமங்களை தன்னகத்தே வைத்திருக்கும் ஓர் அரிய பொக்கிஷமே NKV SYSTEM ஆகும்.